Header Logo
Mogo Academy

ஏனையவை
தமிழ் கலாச்சார அழிவுகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன

Sep 30, 2025 - 04:17 PM -

0

தமிழ் கலாச்சார அழிவுகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன
Mobitel inner

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு மலேசியாவில் கோலாலம்பூரில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டார். 

இம்மாநாட்டில் உரையாற்றிய செந்தில் தொண்டமான், 

அம்மா அப்பா தான் ஒரு குழந்தை தனது வாழ்நாளில் முதலில் சொல்ல ஆரம்பிக்கும் வார்த்தை. ஆனால் அந்த வார்த்தைகள் இன்று மாறி மம்மி, டேடி என தமிழர்கள் வீட்டில் பாவிக்க ஆரம்பித்தார்களோ அப்பொழுதே தமிழ் கலாச்சாரம் சீர்குலைந்து ஆங்கிலேயர்களின் கலாச்சாரம் தலைதூக்க ஆரம்பித்தது. 

பிரித்தானிய காலனித்துவ ஆட்சி காலத்தில் கலாச்சார சீர்குலைவு என்பது மொழியில் ஆரம்பித்து ஒவ்வொரு வீடுகளாக ஆட்கொள்ள தொடங்கியது. 

ஆங்கிலேயரின் கலாச்சாரச்சை நாகரீகமாக கருத தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் ஒவ்வொரு தமிழ் கலாச்சார அழிவுகள் தொடர்ந்தும் இடம்பெற தொடங்கின. அவ்வாறு இருக்கும் நிலையில், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு தலைவர் பா.கு சண்முகம் அவர்கள் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்தல், சான்றோர்களை கௌரவித்தல், போன்ற நல்ல வேலைத்திட்டங்களை மலேசியாவில் முன்னுதாரணமாக செய்து வருகிறார். இந்நிகழ்விற்கு எனக்கு அழைப்பு விடுத்தமை பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும்,தொடர்ந்து தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ் மொழியையும் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களுடைய மிக முக்கியமான பொறுப்பு எனவும் செந்தில் தொண்டமான் தனது உரையில் தெரிவித்தார்.

MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara