பல்சுவை
35 வயது மணப்பெண் வெளியிட்ட தகவல்!

Oct 2, 2025 - 03:10 PM -

0

35 வயது மணப்பெண் வெளியிட்ட தகவல்!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில், 75 வயதான முதியவர் ஒருவர், 35 வயதான பெண்ணை திருமணம் செய்த மறுநாள் காலையே எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம், அவரது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

உயிரிழந்த சங்க்ரு ராம் ஒரு விவசாயி. அவரது மனைவி ஓராண்டுக்கு முன்பு இறந்ததையடுத்து, அவர் தனியாக வசித்து வந்தார். சங்க்ரு ராமுக்குக் குழந்தைகள் இல்லாததால் அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். இதை அவருடைய உறவினர்கள் எதிர்த்தனர். 

ஆனால் யார் பேச்சையும் கேட்காமல் அவர் கடந்த திங்கட்கிழமை மன்பாவதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். மன்பாவதிக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் திருமணம் முடிந்த மறுநாள், அதாவது முதலிரவு முடிந்தவுடன் திடீரென சங்க்ரு ராம் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

சங்க்ரு ராமின் மரணம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உறவினர்கள் இந்த மரணத்தை சந்தேகத்திற்குரியது என்று புகார் அளித்துள்ளனர். இந்த மரணம் குறித்து மேலதிக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05