Header Logo

பல்சுவை
முன்னாள் மாணவருடன் ஆசிரியை செய்த தகாத செயல்

Oct 11, 2025 - 07:32 PM -

0

முன்னாள் மாணவருடன் ஆசிரியை செய்த தகாத செயல்

ஒஸ்ரியா நாட்டில் வசித்து வரும் 28 வயது ஆசிரியை, பாடசாலையில் இருந்து வெளியான 17 வயதுடைய முன்னாள் மாணவரை சந்தித்து தொடர்பு கொண்டிருக்கிறார். 

பின்னர், அந்த மாணவரை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்று விருந்து கொடுத்திருக்கிறார். 

இந்த சந்திப்பு அடிக்கடி நடந்துள்ள நிலையில் அவருடன் ஆசிரியை உல்லாசத்தில் ஈடுபட்டு இருக்கிறார். 

2024-ம் ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில் பலமுறை அவர்களுடைய சந்திப்பு இடம்பெற்றுள்ள நிலையில், சந்திக்கின்ற சந்தர்ப்பங்களில் அவர்கள் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில் இது தொடர்பான வீடியோக்களை அந்த மாணவர் பதிவு செய்து வைத்திருக்கிறார். அவற்றை வேறு சில மாணவர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். இதனை பார்த்து அந்த மாணவர்கள் கும்பலாக ஆசிரியையின் வீட்டுக்கு சென்றுள்ளனர். 

அங்கு அவர்களிடம் வீடியோவை ஆசிரியையிடம் காண்பித்து அவரை மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 7 பேர் கொண்ட அந்த மாணவர் கும்பல் ஆசிரியையின் வீட்டிலேயே தங்கி குற்ற செயல்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். 

போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளதுடன் நாங்கள் ஒரு குற்றவாளி கும்பல் என்றே கூறி அவரை அச்சுறுத்தி உள்ளனர். இதனை வெளியே கூறினால், மாணவனுடனான வீடியோவை வெளியே பரப்பி விடுவோம் என மிரட்டினர். 

வேலை பறிபோய் விடும் என பயந்து ஆசிரியை எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்துள்ளார். 

வீட்டை விட்டு வெளியேற்ற முடியாமல் தவித்து வருகிறார். அந்த கும்பல் ஈராக், ருமேனியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள். பகலில் கடத்தலில் ஈடுபட்ட அந்த கும்பல், இரவில், அந்த ஆசிரியையிடம் வீடியோக்களை காட்டி மிரட்டி பாலியல் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டு உள்ளனர். 

உணவு, வாடகை கார், மதுபானம் என பல வகையான தேவைகளுக்கு அவரிடம் இருந்து பணம் பறித்து உள்ளனர். 

அவர்கள் கும்பலாகவும், தனியாகவும் இந்த தகாத உறவில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். அவற்றையும் வீடியோவாக எடுத்து வைத்து, பாடசாலையில் பரப்பி விடுவோம் என மிரட்டி உள்ளனர். 

பல மாதங்களாக இந்த கொடூரம் தொடர்ந்த நிலையில், ஒரு நாள் வீட்டுக்கு அவர்கள் தீ வைத்து விட்டு சென்றனர். பொருட்களையும் கொள்ளையடித்து விட்டு தப்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியை நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த மாணவர் கும்பலில் சிலரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதில், அந்த மாணவ கும்பல் பலாத்கார சம்பவம் ஆசிரியையின் சம்மதத்துடனேயே நடந்தது என கூறியுள்ளதாகவும் வீட்டுக்கு தீ வைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். 

எனினும் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன் அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெற உள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

title