Oct 12, 2025 - 05:16 PM -
0
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு வைத்தியசாலையில் பிணவறையில் பெண்ணின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக நீலேஷ் பில்லாலா (25) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 18, 2024 அன்று கக்னர் சமூக சுகாதார நிலையத்தின் பிரேதப் பரிசோதனை அறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் நடந்து பல மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் மாதத்தில் வைத்தியசாலை ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்தச் செயல் வெளிச்சத்துக்கு வந்தது.
சிசிடிவி காட்சிகளில், குற்றம் சாட்டப்பட்ட பில்லாலா நள்ளிரவில் பிரேதப் பரிசோதனை மையத்திற்குள் நுழைந்து, சடலத்தை ஸ்ட்ரெச்சரில் இருந்து இழுத்து, கேமராவின் பார்வையில் படாத ஒரு மூலைக்குக் கொண்டு சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு சடலத்தை மீண்டும் ஸ்ட்ரெச்சருக்கு அருகில் வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்தக் காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுதியது.
இந்நிலையில் வைத்தியர் ஆதியா தாவர் என்பவர் கடந்த 7 ஆம் திகதி அளித்த புகாரின் பேரில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து நீலேஷ் பில்லாலாவை கைது செய்து செய்தனர்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.