Header Logo
SLIC
மலையகம்
10 பேர்ச்சஸ் காணிரை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவும்!

Oct 14, 2025 - 12:13 PM

10 பேர்ச்சஸ் காணிரை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவும்!
Mobitel Inner 1278
EDEX Inner

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். 

ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

மலையக மக்கள் தொடர்பில் ஜனாதிபதியே அதிகம் கதைத்திருந்தார். எனவே, பண்டாரவளையில் அசல் காணி உரித்து வழங்கப்படும் என நம்பி இருந்தேன். ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை. கடசாதி ஆவணமே கையளிக்கப்பட்டுள்ளது. 

2015 இல் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய வீட்டுத் திட்டம் ஆரம்பமானது. ஒரிஜினல் டீட் வழங்கப்பட்டது. இது பொய்யென ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் விமர்சித்திருந்தார். ஆனால் அவர்களின் ஆட்சியின்போது அவர் அதனையே வழங்கினார். 

நல்லாட்சி காலத்தில் எல்லோருக்கும் காணி உரிமை வழங்க முடியாமல்போனது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. தற்போதைய ஜனாதிபதி ஆட்சியின்கீழ் எமது மக்களுக்கு காணி உரிமை வழங்க முடியும். 10 பேர்ச்சஸை வழங்குமாறு நான் ஜனாதிபதியிடம் கோருகின்றேன். பணடாரளையில் கட்டப்படும் வீடுகளுக்கும் விரைவில் அசல் உரித்து வழங்கப்படும். 

நல்லாட்சி காலத்திலேயே மலையக பகுதிகளில் அதிகளவான வீடுகள் கட்டப்பட்டன. அதேவேளை, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றால் நல்லது. ஆனால் கம்பனிகள் இன்னும் பதிலை வழங்கவில்லை. எனினும், வருட இறுதிக்குள் சம்பள உயர்வு கிடைக்குமென ஜனாதபதி கூறுகின்றார். இதனை நான் நம்பவில்லை. 

தோட்டங்களை மக்களுக்கு பிரித்து கொடுத்து, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். இந்திய வீட்டுத் திட்டத்தை விரைவில் நிறைவு செய்யுமாறு கோருகின்றேன். எமது மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணிவை வழங்கினால், அவர்களால் வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள முடியும். அதுவே சிறந்த திட்டம். 

நாம் களவெடுக்கவில்லை. மக்களுக்கும் இது தெரியும். எனவே, அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். சில அமைச்சர்கள் பொய்யுரைப்பதுதான் பிரச்சினை என தெரிவித்தார்.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278