Header Logo
SLIC
மலையகம்
குளவி கொட்டுக்கு இலக்காகிய பெண் தொழிலாளர்கள்

Oct 16, 2025 - 05:11 PM

குளவி கொட்டுக்கு இலக்காகிய பெண் தொழிலாளர்கள்
Mobitel Inner 1278
EDEX Inner

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென் ஜோன் டிலரி தோட்டப் பகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 12 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் இன்று (16) முற்பகல் 11.30மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

நோர்வூட் சென்ஜோன் டிலரி தோட்டத்தில் உள்ள 08ம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த போது தேயிலை மலையின் அடிவாரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

இதில் மூன்று பெண் தொழிலாளர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதோடு, மேலும் 09 பேர் தொடர்ந்தது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

இதேவேளை காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் குறித்து எவரும் அச்சமடைய தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278