Oct 18, 2025 - 03:18 PM -
0
பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார்களான ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் ஒன்றாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான்,
'எங்கள் மூவரையும் (ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர் கான்) நாங்கள் ஒருபோதும் ஸ்டார்கள் என்று கருத்திக்கொண்டதில்லை' என தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய ஷாருக் கான்,
'அமீர்கான் மிகசிறந்த நடிகர். ஒரு கதையைச் சொல்ல அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார்.
சல்மான் கான் அவரது இதயத்திலிருந்து மிக சுதந்திரமாக வேலையை செய்கிறார். நான் இந்த இரண்டையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறேன்' என தெரிவித்தார்.
இறுதியாக பேசிய அமீர் கான்,
'நாங்கள் மூவரும் ஒரே படத்தில் ஒன்றாக நடிக்க தயாராக இருக்கிறோம். அதற்கேற்ற சரியான கதை அமைந்தால் நாங்கள் மூவரும் ஒரே படத்தில் நடிப்போம்' என தெரிவித்தார்.

