Header Logo

சினிமா
பிரபு சாலமனினின் “கும்கி 2” பட டீசர் வெளியீடு

Oct 18, 2025 - 05:41 PM -

0

பிரபு சாலமனினின் “கும்கி 2” பட டீசர் வெளியீடு

பிரபுசாலமன் இயக்கத்தில் மதியழகன் நடித்துள்ள ‘கும்கி 2’ படம் எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி வெளியாகிறது. 

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான படம் 'கும்கி'. 

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். 

தற்போது பிரபு சாலமன் - சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தில் பணிபுரிந்துள்ளது. இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. 

‘கும்கி 2’ படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில், கதாநாயகனாக மதியழகன் அறிமுகம் ஆகிறார். 

வில்லனாக ஹரிஷ் பெராடி அறிமுகம் ஆகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title