Header Logo
SLIC
மலையகம்
பேருந்துகளில் அதிக கட்டணம் அறவிடுவதை கண்டறிய சோதனை நடவடிக்கை

Oct 19, 2025 - 05:54 PM

பேருந்துகளில் அதிக கட்டணம் அறவிடுவதை கண்டறிய சோதனை நடவடிக்கை
Mobitel Inner 1278
EDEX Inner

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கொழும்பிலிருந்து ஹட்டன் மற்றும் ஹட்டனில் இருந்து குறுகிய தூரத்திற்குச் செல்லும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் அறவிடுவதை கண்டறிவதற்காக மத்திய மாகாண போக்குவரத்து சேவைகள் சோதனைப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (19) திடீர் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. 

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் உள்ள வட்டவளைப் பகுதியில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது, 

இதில் அங்கீகரிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக கட்டணம் வசூலித்து பயணிகளை ஏற்றிச் சென்றது, நடத்துனர் உரிமம் இல்லாமல் பேருந்துகளில் பயணிப்பவர்களிடமிருந்து பணம் பெற்றது, பயணிகள் அனுமதிச் சீட்டு இல்லாமல் பேருந்துகளை இயக்கியது, பயணிகள் போக்குவரத்து அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பாதைக்கு மாறாக வேறு பாதைகளில் பேருந்துகளை இயக்கியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக பல சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடமிருந்து ரூ. 207,000/= அபராதம் வசூலிக்கப்பட்டதாக என மத்திய மாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் சோதனைப் பிரிவின் தலைமை ஆய்வாளர் பி.எஸ்.டி.பி. விஜேசிங்க தெரிவித்தார். 

பயணிகளிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தீபாவளி பண்டிகை முடியும் வரை இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படும் என விஜேசிங்க மேலும் தெரிவித்தார். 

அத்துடன் பண்டிகைக் காலத்தில் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்பவர்களிடம் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் அறவிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278