Oct 23, 2025 - 01:19 PM -
0
இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும் இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள இல்லத்தில் சபேஷின் உயிர் பிரிந்தது.
சமுத்திரம், பொக்கிஷம், தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் இசையமைத்துள்ளார்.
பல்வேறு படங்களுக்கு பின்னணி இசை அமைத்த சபேஷ் திரைப்பட இசையமைப்பாளர் சங்கத்தலைவராகவும் இருந்துள்ளார்.
இசையமைப்பாளர் சபேஷின் மறைவுக்கு திரையுலங்கினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

