சினிமா
தமிழ் சினிமாவில் பெரும் சோகம்..! இரண்டு பிரபலங்கள் உயிரிழப்பு!

Oct 23, 2025 - 03:21 PM -

0

தமிழ் சினிமாவில் பெரும் சோகம்..! இரண்டு பிரபலங்கள் உயிரிழப்பு!

இன்று ஒரே நாளில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்திருப்பது திரையுலகனரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பலரும் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தமிழில் ‘தவமாய் தவமிருந்து’, ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, ‘பொக்கிஷம்’, ‘ஆட்டோ கிராஃப்’ போன்ற படங்களுக்கு இசையமைத்து ‘க்ளாசிக்’ பாடல்களுக்கு சொந்தமானாவர் சபேஷ். 

தன்னுடைய சகோதரர் தேவாவுடன் உதவியாளராக, பணியாற்றி தன்னுடைய இன்னொரு சகோதரரான முரளியுடன் இணைந்து சபேஷ் - முரளி என்ற பெயரில் தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்தார். 

சபேஷ் - முரளியின் இசை தொடக்கம் என்பது கடந்த 2001-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘சமுத்திரம்’ படம் தான். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர்களாக அறிமுகமான சபேஷ் - முரளி, அடுத்து ’நைனா’, ‘பாறை’, ‘அயோத்யா’ உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

மேலும், ‘ஜோடி’ படம் தொடங்கி, ‘பாரிஜாதம்’, ‘தலைமகன்’, ‘அரசாங்கம்’, ‘சிந்து சமவெளி’, ‘அன்னக்கொடி’, ‘கொடி வீரன்’, ‘திருமணம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு பின்னணி இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில் சபேஷ் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 68. 

முன்னதாக நடிகை மனோரமாவின் மகன் பூபதி மூச்சு திணறல் காரணமாக இன்று காலை 10:15 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை மனோரமா. 1,000 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர். மனோரமாவின் ஒரே மகன் பூபதி . அவரைத் திரையுலகில் அறிமுகப்படுத்தி பிரபலமாக்க மனோரமா பல முயற்சிகள் எடுத்தார். 

ஆனால் அவரை தோல்வியில் முடிந்தன. இருப்பினும், நடிகர் விசுவின் 'குடும்பம் ஒரு கதம்பம்' படத்தில் அறிமுகமான பூபதி அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். ஆனால், பெரிய அளவில் கவனம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05