சினிமா
100 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த 'டியூட்'!

Oct 23, 2025 - 04:21 PM -

0

100 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த 'டியூட்'!

இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். 

இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ஆம் திகதி வெளியானது. தன் மாமன் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய தயாராகும் நாயகனுக்கு, அப்பெண்ணுக்கு வேறொருவர் பிடித்திருப்பது தெரிந்தும் திருமணம் செய்து பின்னர், அப்பெண்ணை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க நாயகன் பாடுபடுவதும், அதன்பின் நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க நாயகி பாடுபடுவதும் என சாதிக்கு எதிராக படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது. 

அதன்படி, 'டியூட்' படம் வெளியான நாள் முதல் வசூலை குவித்து வருகிறது. அந்த வகையில் படம் வெளியான ஐந்து நாட்களில் உலகளவில் நேற்று ரூ.95 கோடி வசூலை குவித்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இந்நிலையில், டியூட் படம் உலகளவில் 6 நாட்களில் ரூ.100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது. இதுதொடர்பாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

முன்னதாக, பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே, டிராகன் பட வெற்றியை தொடர்ந்து டியூட் படம் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனையில் ஹெட்ரிக் வெற்றியை சுவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05