சினிமா
ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி கேட்ட நடிகை

Oct 24, 2025 - 08:43 AM -

0

ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி கேட்ட நடிகை

'ரெட்ரோ, ஜனநாயகன்' படங்களுக்கு பிறகு ரஜினி நடித்த 'கூலி' படத்தில் மோனிகா என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார் பூஜாஹெக்டே. 

அந்த பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதையடுத்து தற்போது ராகவா லோரன்ஸ் இயக்கி நடித்து வரும் 'காஞ்சனா-4', தெலுங்கில் துல்கர் சல்மானின் 41வது படங்களில் நடிக்கிறார். 

இந்த நிலையில் அடுத்தபடியாக அல்லு அர்ஜுனை வைத்து அட்லி தற்போது இயக்கி வரும் சயின்ஸ் பிக்சன் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் பூஜாஹெக்டே. 

இந்த படத்தில் தான் நடனமாடும் ஐந்து நிமிட பாடலுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பேசி உள்ளாராம். 

இந்திய திரையுலகில் ஒரு பாடலுக்காக நடிகை ஒருவர் வாங்கும் அதிகூடிய சம்பளம் இதுவாகும் என கூறப்படுகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05