சினிமா
ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு மீண்டும் வந்த சிக்கல்

Oct 24, 2025 - 09:05 AM -

0

ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு மீண்டும் வந்த சிக்கல்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். 

அவரை தொடர்ந்து இதே வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டிருந்தார். 

கைது செய்யப்பட்ட 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியது. 

இந்நிலையில், ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு அடுத்த சிக்கல் வந்துள்ளது. 

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு அமுலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

ஸ்ரீகாந்த் வரும் 28ம் திகதியும், கிருஷ்ணா வரும் 29ம் திகதியும் அதில் ஆஜராக அமுலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05