Header Logo

சினிமா
மீண்டும் விளையாட்டை கையில் எடுக்கும் அருண் ராஜா

Oct 26, 2025 - 08:09 AM -

0

 மீண்டும் விளையாட்டை கையில் எடுக்கும் அருண் ராஜா

அருண் ராஜா காமராஜ் முதலில் நடிகராக ராஜா ராணி, மான் கராத்தே மூலம் மக்களிடையே பிரபலமானார். 

இது அல்லாமல் அவர் 'நெருப்பு டா', 'வரலாம் வரலாம் வா', 'கொடி பறக்குதா', செம வெயிட்டு' உள்ளிட்ட பல பாடல்களை எழுதி, பாடினார். 

அதன் பின்னர் 'கனா', 'நெஞ்சுக்கு நீதி', 'லேபிள் வெப் தொடர்' போன்ற படைப்புகளை ஒரு இயக்குனராக தந்தார். 

கடந்தாண்டு வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது. 

அந்த அறிவிப்பிற்கு பிறகு இந்த படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. 

தற்போது விஷ்ணு விஷால் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது "அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் ஒரு வித்தியாசமான விளையாட்டு படம். 

இதற்கான முன் தயாரிப்பு பணிகள் திவீரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் அல்லது ஜனவரியில் இதன் படப்பிடிப்பு துவங்கும்" என்றார். 

இதன் மூலம் கனா படத்திற்கு பிறகு மீண்டும் அருண் ராஜா காமராஜ் விளையாட்டை மையப்படுத்திய கதைக்களம் கொண்ட படத்தை கையில் எடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title