Header Logo

சினிமா
'ஜூடோபியா - 02' வௌியீட்டு திகதி அறிவிப்பு

Oct 29, 2025 - 03:43 PM -

0

 'ஜூடோபியா - 02' வௌியீட்டு திகதி அறிவிப்பு

வேர்ல்ட் டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படமான 'ஜூடோபியா' 2016ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. 

அந்த ஆண்டின் சிறந்த அனிமேஷன் படத்திற்காக ஒஸ்கார் விருதையும் பெற்றது. 

இதன் இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பல்வேறு காரணங்களால் வேர்ல்ட் டிஸ்னி இரண்டாம் பாகத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது. 

இந்த நிலையில் அடுத்த மாதம் 28ம் திகதி படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 

முதல் பாகத்தில் ரசிகர்களை குறிப்பாக குழந்தைகளை ஈர்த்த காவல்துறை அதிகாரிகளான ஜூடி ஹாப்ஸ் (ஜின்னிபர் குட்வின் குரல்) மற்றும் நிக் வைல்ட் (ஜேசன் பேட்மேனின் குரல்) ஆகியோர் இந்த பகுதியிலும் தங்கள் சாகசத்தை தொடர்கிறார்கள். 

இருவரும் கேரி டி'ஸ்னேக் (கே ஹுய் குவானின் குரல்) உடன் இணைகிறார்கள். முதல் பாகத்தை இயக்கிய ஜாரெட் புஷ், பைரன் ஹோவர்ட் ஆகியோரே இதனையும் இயக்கி உள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title