சினிமா
Husky டேன்ஸ் டிரெண்டில் இணைந்த விஜய் ஆண்டனி

Oct 29, 2025 - 04:23 PM -

0

 Husky டேன்ஸ் டிரெண்டில் இணைந்த விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி மற்றும் அஜய் தீஷன் நடிப்பில் வெளியான மார்கன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

அடுத்ததாக விஜய் ஆண்டனி நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கோர்பரேஷன் பூக்கி என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் அஜய் தீஷன் கதாநாயகனாக நடிக்கிறார். 

பூக்கி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வருகிறது. 

திரைப்படம் 2026 ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது. தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார் 

இந்நிலையில், இப்படத்தை ப்ரொமோட் செய்யும் விதமாக இணையத்தில் வைரலாகி வரும் Husky டேன்ஸை விஜய் ஆண்டனி ரீக்ரியேட் செய்துள்ளார். 

இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

'வெடி' படத்தில் இடம்பெற்ற 'இச்சு இச்சு' பாடலுக்கு, Husky நாய் நடனமாடுவது போன்ற AI வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05