சினிமா
காதலியை கரம் பிடித்த ‛டுவரிஸ்ட் பேமிலி' பட இயக்குனர்

Oct 31, 2025 - 02:06 PM -

0

 காதலியை கரம் பிடித்த ‛டுவரிஸ்ட் பேமிலி' பட இயக்குனர்

‛டுவரிஸ்ட் பேமிலி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். 

சசிகுமார், சிம்ரன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்தனர். குறைந்த பட்ஜெட்டில் உருவாகி இந்தாண்டில் அதிக லாபத்தை தந்த படமாக அமைந்தது. 

சமீபத்தில் இப்பட வெற்றிக்காக இவருக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக அளித்தார் இப்பட தயாரிப்பாளர் மகேஷ் பசிலியான். 

‛டுவரிஸ்ட் பேமிலி' பட விழாவில் தனது தோழி அகிலாவை காதலிப்பதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்ய போவதாகவும் அறிவித்தார். 

இந்நிலையில் இன்று ( 31) சென்னையில் அபிஷன் - அகிலா திருமணம் இனிதே நடந்தது. இதில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

அபிஷன் ஜீவிந்த் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்துள்ளார். இதில் நாயகியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. 

இவர்களது திருமணத்திற்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

முன்னதாக நேற்று சென்னை, க்ரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில், நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம்எஸ் பாஸ்கர் , ரமேஷ் திலக், நடிகைகள் சிம்ரன், அனஸ்வரா, தயாரிப்பாளர்கள் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், சவுந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான், அருண் விஷ்வா, ஷினீஷ், இயக்குநர்கள் 'பூ' சசி, ரஞ்சித் ஜெயக்கொடி, சண்முகப்பிரியன் (லவ் மேரேஜ்), பிரபு ராம் வியாஸ் (லவ்வர்) , மதன் (அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் படம்) இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன்ராஜ், விநியோகஸ்தர் விர்தூஷ், எடிட்டர் பரத் ராம், திங் மியூசிக் சந்தோஷ், ஜியோ ஹாட்ஸ்டார் சபரி ஆகியோர் கலந்துகொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05