Header Logo

வடக்கு
பெரும்போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் விநியோகம்

Oct 31, 2025 - 04:20 PM -

0

பெரும்போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் விநியோகம்

மன்னார் மாவட்டத்தில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் விநியோகமானது இன்று (31) காலை 11 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

பெரும் போகத்திற்கு 33,000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் முதலாவது நீர் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

வட மாகாணத்தில் 2 ஆவது பெரிய குளமான முருகன் கட்டுக்கரை குளம் பெரிய உடைப்பு துருசு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் மத தலைவர்கள் ஆசியுடன் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நீர்ப்பாசன பணிப்பாளர், முருங்கன் கட்டுக்கரை குளம் நீர்ப்பாசன பொறியியலாளர், திணைக்கள அதிகாரிகள், வாய்க்கால் அமைப்பு பிரதிநிதிகள் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

தற்போது கட்டுக்கரை குளத்தில் 9.2 அடி நீர் காணப்படுகிறது. மேலும் கட்டுக்கரை குளத்திற்கு நீர்வரத்து காணப்படுகின்றது. 

இந்த நிலையில் கடந்த 22 ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய முதலாவது நீர் வினியோகமானது இன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title