Nov 1, 2025 - 04:06 PM -
0
சென்னையில் நேற்று திருமணம் செய்த ‛டுவரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், தனது மனைவி அகிலாவுடன் இன்று (1) ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் : டுவரிஸ்ட் பேமிலி வெற்றிக்கு பின் இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறேன்.
தொடர்ந்து நடிக்கவும் இயக்கவும் செய்வேன். என் இணை இயக்குனர் மதன் இயக்கத்தில் நான் நடித்து வரும் பெயரிடப்படாத படம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் ரிலீஸ். அடுத்த ஆண்டு ஒரு படம் இயக்க உள்ளேன்.
பாடசாலை பருவ காலத்தில் இருந்தே அதாவது 6வது படிக்கிற காலத்தில் இருந்து மனைவி அகிலாவை காதலித்தேன்.
இப்பொழுது திருமணத்தில் முடிந்துள்ளது. அவர் கேட்ட திருமண பரிசாக, டுவரிஸ்ட் பேமிலி தயாரிப்பாளர் வழங்கிய சொகுசு காரில் அவருடன் சென்னை, ஈசிஆர் பகுதியை சுற்றி வந்தேன்.
வருங்காலத்தில் அவருடன், குட்டி அபி உடன் சுவிட்சர்லாந்து சுற்றுலாவுக்கு செல்ல ஆசை. தவிர, நான் அவருக்கு சில திருமண பரிசு கொடுத்தேன். அது பர்சனல் என தெரிவித்துள்ளார்.

