Header Logo

வடக்கு
குன்றுப்பள்ளாறு என்ற அணைக்கட்டு திறப்பு வைப்பு

Nov 1, 2025 - 04:45 PM -

0

குன்றுப்பள்ளாறு என்ற அணைக்கட்டு திறப்பு வைப்பு

உலக வங்கியின் 41 மில்லியன் ரூபா நிதி உதவியில் புதுக்குடியிருப்பு கமநல சேவை திணைக்களத்தின் கீழ் மல்லிகைத்தீவு கிராமத்தில் பேராற்றினை மறித்த கட்டிய குன்றுப்பள்ளாறு என்ற அணைக்கட்டு திறப்பு நிகழ்வு இன்று (01) நடைபெற்றது. 

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இலங்கைக்கான உலக வங்கியின் பிரதிநிதி வைத்தியர் சேகு (DR.Sehu) கலந்துகொண்டு சிறப்பித்துள்ளதுடன், சியாப் திட்டப்பணிப்பாளர் சமன்பந்துல புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர் கமநல சேவைத்திணைக்கள அதிகாரிகள், சியாப்திட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள். 

மல்லிகைத்தீவு கமக்கார அமைப்பின் தலைவர் ஐயாமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விருந்தினர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு அணைக்கட்டுத்திறப்பு நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது. 

முத்தையன் கட்டு குளத்தின் கீழான பேராறு கழிவு நீர்ஆனது கடந்த காலங்களில் நந்திக்கடலில் கலந்து அது முல்லைத்தீவு கடலுடன் செல்கின்ற நிலையில் இந்த கழிவு நீரினை மறித்து விவசாயம் செய்யும் நோக்கில் விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக புதுக்குடியிருப்பு கமநலசேவைத்திணைக்களத்தின் கீழ் உள்ள பகுதிகளில் ஆறு இடங்களில் இவ்வாறான அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டு இருபோகங்கள் விவசாய செய்கையினை மேற்கொள்ளக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் மழையினை நம்பியே காலபோக நெற்செய்கையினை விவாசாயிகள் மேற்கொண்டு வந்துள்ளார்கள். இந்த ஆறு அணைக்கட்டிற்குமான நிதியினை உலக வங்கி சுமார் 260 மில்லியன் ரூபா நிதியில் சியாப் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஆண்டுதோறும் பேராறு எனப்படும் ஆறு ஊடாக அதிகளவான மழைநீர் மற்றும் கழிவு நீர் கடலினை சென்றடைந்து வருகின்றது இவ்வாறு கழிவு நீரினை வீண்விரயம் செய்யாது அதனை விவசாய செய்கைக்கு பயன்படுத்தி விவசாய வளர்ச்சிக்கு இந்த அணைக்கட்டுக்கள் உறுதுணையாக அமைந்துள்ளன. 

பேராற்றினை மறித்து ஆறு இடங்களில் அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டு வருகின்றன இவ்வாறு கட்டப்பட்டு வரும் அணைக்கட்டுக்களில் ஒன்றான குன்றுப்பள்ளாறு எனப்படும் அணைக்கட்டு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

புதுக்குடியிருப்பு கமநலசேவைத்திணைக்களத்தின் கீழ் இவ்வாறு உலக வங்கி நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு வருகின்ற ஆறு அணைக்கட்டுகளுக்கு கீழும் சிறுபோக விவாசாய செய்கைக்காக சுமார் 1,800 ஏக்கர் வரை விவசாய செய்யை மேற்கொள்ளப்படும் 2,000 விவசாயிகளை நன்மை அடையக்கூடியவகையிலும் இது அமைந்துள்ளது. 

இந்த திட்டத்திற் முழுமையான நிதியினை வழங்கிய உலக வங்கிக்கும் ஏனைய அரச திணைக்களத்திற்கும் விவசாயிகள் நன்றியினை தெரிவித்துள்ளார்கள்.

--

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

title