Header Logo

சினிமா
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் டிசி

Nov 1, 2025 - 06:30 PM -

0

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் டிசி

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். 

ரஜினி, கமல், விஜய், கார்த்தி போன்ற நடிகர்களின் படங்களை இயக்கி பிரபலமானார். 

கடைசியாக ரஜினியை வைத்து அவர் இயக்கிய ‛கூலி' படம் 600 கோடி வசூலை கடந்தது. 

அடுத்து ‛கைதி 2' படத்தை இயக்க உள்ளார். இதற்கிடையே அவர் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். 

சமீபத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

படத்திற்கு ‛டிசி' (DC) என பெயரிட்டுள்ளனர். நாயகியாக ‛மாலை நேரத்து மயக்கம்' படத்தில் நடித்த வாமிகா கபி நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். 

இப்படம் தொடர்பாக வெளியிடப்பட்ட முன்னோட்ட வீடியோவில் கையில் கத்தி உடன் வாயில் புகைத்தப்படி, முகத்தில் ரத்தக்கறையுடன் ‛தேவதாஸ்' என்ற கேரக்டரில் லோகேஷ் வருகிறார். 

வாமிகா கபி பாலியல் தொழில் செய்பவர் போன்று சந்திரா என்ற ரோலில் நடிப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளனர். 

இவர்களின் கேரக்டர் பெயர் தேவதாஸ், சந்திரா என்பதன் சுருக்கமாக ‛டிசி' (DC) என பெயரிட்டுள்ளனர். படம் ஆக் ஷன் கதையில் தயாராகிறது.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title