Nov 3, 2025 - 01:45 PM -
0
இப்போது பழைய படங்கள் ரீ ரிலீஸ் ஆகும் சீசன் நடக்கிறது. சமீபத்தில் விஜயின் ‛சச்சின், குஷி', விஜயகாந்த்தின் ‛கேப்டன் பிரபாகரன்' ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் ஆனது.
இந்நிலையில், சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படமும் டிஜிட்டலில் புத்தம்புது பொலிவுடன் எதிர்வரும் 14ம் திகதி ரீ ரிலீஸ் ஆகிறது. 2004ம் ஆண்டு வெளியான இந்த படம் 21 ஆண்டுகளுக்கு பின் ரீ ரிலீஸ் ஆகின்றது.
அப்போது ஆட்டோகிராப் படத்தின் கதையும், பாடல்களும், சேரன், சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டன.
குறிப்பாக, பரத்வாஜின் ஒவ்வொரு பூக்களும், ஞாபகம் வருதே பாடலும், படத்தின் திரைக்கதையும் வெகுவாக மக்களிடம் போய் சேர்த்தன.
சிறந்த படம், சிறந்த பின்னணி பாடகி (சித்ரா), சிறந்த பாடலாசிரியர் ( பா.விஜய்) என 3 தேசிய விருதுகளை ஆட்டோகிராப் பெற்றது.
பல தனியார் விருதுகளையும் அள்ளியது. இன்றும் ஆட்டோகிராப் சீன்களும், கதையும் பேசப்படும் நிலையில், படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார் சேரன். இந்த படத்தை தவிர, கமலின் ‛நாயகன்' படமும் நவம்பர் 6ம் திகதி ரிலீஸ் ஆக உள்ளது.

