Nov 3, 2025 - 06:40 PM -
0
பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் நேற்று (02) தனது 60 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். ஒவ்வொரு பிறந்த நாளும் கடற்கரையை ஒட்டியுள்ள மன்னத் பங்களாவில் ரசிகர்களை பார்த்து, வாழ்த்துகளை பெறுவார்.
இதற்கான நேற்று காலை முதலே, மன்னத் வீடு முன்பு ரசிகர்கள் குவியத் தொடங்கினர். வழக்கமாக பங்களாவில் இருந்து ரசிகர்களை பார்த்து கையசைத்து வாழ்த்துகளை பெறுவார்.
ஆனால், நேற்று அவர் மன்னத் பங்களாவில் இருந்து ரசிகர்களை பார்க்கவில்லை. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ரசிகர்களை சந்திக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் உங்களை மிஸ்சிங் செய்கிறேன். இதற்காக அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷாருக்கான் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவிப்பதாவது,
எனக்காக காத்திருந்த அன்பான ரசிகர்களை, நான் வெளியே வந்து வரவேற்க வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
உங்கள் அனைவரிடம் எனது ஆழ்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். ஆனால் கூட்டக் கட்டுப்பாட்டுப் பிரச்சினைகள் காரணமாக அனைவரின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காக இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரிந்து கொண்டதற்கு நன்றி, என்னை நம்புங்கள். உங்களை விட அதிகமாக உங்களைப் பார்ப்பதை நான் மிஸ் செய்வேன். உங்கள் அனைவரையும் பார்க்கவும் அன்பைப் பகிர்ந்து கொள்ளவும் ஆவலுடன் இருந்தேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என தெரிவித்தார்.

