Nov 4, 2025 - 11:16 AM -
0
பிக் பாஸ் வீடு இன்று (04) கலவரம் பூமியாக மாறி இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் நடந்த சண்டையில் பிரவீனை கம்ருதீன் அடிக்க, அவர் சரிந்து விழுந்தார். கம்ருதீனை தடுக்க சென்ற பிரஜன் எப்படி அவனை அடிப்ப என்று சண்டை போட்டதால், வீடு கலவரமாக இருந்தது.
பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 9 போட்டியில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்ததில் இருந்து ஆட்டம் சூடு பிடித்திருக்கிறது என்று சொல்லலாம். வைல்டு கார்டு போட்டியாளராக பிரஜன் அவரது மனைவி சாண்ட்ரா, திவ்யா கணேஷ் மற்றும் அமித் ராகவ் என நான்கு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்ததுமே நீங்கள் என்ன விளையாட்டு விளையாடுறீங்க, உங்கள் விளையாட்டை பார்ப்பதற்கே முடியவில்லை என பலவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
பிக் பாஸ் சீசன் 9 குறிப்பாக திவ்ய கணேஷ் பார்வதியிடம் நீங்கள் ஒரு பிரபலம் அப்படி இருக்கும்போது வெளியில் எப்படி உங்களை காட்டுவார்கள் என்பது உங்களுக்கு தெரிய வேணாமா என கம்ருதீன் பார்வதி இடையேயிலான நட்பு குறித்து பேசினார்.
பார்வதி, திவ்யா மற்றும் சாண்ட்ரா இருவரிடமே தனிப்பட்ட முறையில் நாங்கள் இருவரும் பேசி விட்டோம் இனிமேல் அதுபோன்று நடக்காது வெளியில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என சொல்லிவிட்டேன் என்றார். பிக் பாஸ் வீட்டிற்குள் இப்படி நடந்ததை வெளியில் இருக்கும் உங்களுடைய அம்மா பார்த்தால் எப்படி இருக்கும் என திவ்யா பேசினார். அப்போது அமைதியாக இருந்த பார்வதி அதன் பிறகு என்னுடைய அம்மாவிற்கு நான் எப்படி என்று தெரியும் என்னுடைய தனிப்பட்ட பிரச்சனையை நான் தனியாகவே பார்த்துக் கொள்கிறேன் அதைப்பற்றி இந்த வீட்டில் யாரும் பேச வேண்டாம் என நேற்று அதிரடியாக பேசினார்
இதையடுத்து, நேற்று (03) திவ்யா கணேஷ் வீட்டுத்தலையானதும், இன்னும் பிரச்சனை சூடு பிடிக்க ஆரம்பித்தது. திவ்யா, பாருவிடம் கம்ருதீன் பற்றி கூறியதால் ஏற்கனவே கடுப்பில் இருந்த கம்ருதீன் சரியான நேரம் பார்த்து பிரச்சனைக்காக காத்திருந்தார். இதையடுத்து, தற்போது முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், கம்ருதீனுக்கும் பிரவீனுக்கு வாதம் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் பேசிக்கொண்டு இருக்கின்றனர். ஒருகட்டத்தில் சண்டை அதிகரித்த நிலையில் ஒருவருக்கு ஒருவர் இடையே சரமாரியாக தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது, கம்ருதீன் பிரவீனை அடித்ததில் அவர் கீழே விழுந்தார். அவதை தொடர்ந்து, பிரஜன், கம்ருதீனை அடிக்க பாய அனைவரும் தடுத்து விடுகின்றனர். இதைப்பார்த்த சாண்டா, பிரஜனை கட்டிப்பிடித்து எதற்காக இப்படி செய்தாய் என்று கேட்டு கதறி அழுகிறாள்.
தற்போது வெளியாகி இருக்கும் இந்த ப்ரோமோவால் பிக் பாஸ் வீட்டிற்கு ஏதோ பெரிய விபரீதம் நடந்திருக்கிறது என்று அனைவரும் பேசி வரும் நிலையில், இது பிக் பாஸ் கொடுத்த டாக்ஸ் என்றும் பிராக் என்பது தெரியவந்துள்ளது. காலையில், கம்ருதீன், பிரவீன், பிரஜன் மூன்று பேரும் தனியாக சென்று பேசி,யார் யார் என்னென் பேச வேண்டும், எப்படி அடிக்க வேண்டும் என அனைத்தையும் பேசி வைத்துக்கொண்டு தான் இந்த சண்டையை நடத்தி இருக்கிறார்கள்.

