Header Logo

சினிமா
மணிரத்னம் படத்தில் நடிப்பது ஆசீர்வாதம்

Nov 5, 2025 - 05:17 PM -

0

மணிரத்னம் படத்தில் நடிப்பது ஆசீர்வாதம்

திருமணத்திற்கு பிறகும் தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தி படங்களிலும் பரவலாக நடித்து வருகிறார் பிரியாமணி. 

தற்போது தமிழில் விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிரியாமணி, ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய 'ராவணன்' என்ற படத்தில் விக்ரமின் தங்கை வேடத்தில் நடித்திருந்தார். 

இந்த நிலையில் மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 

இது குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''தமிழ் சினிமாவை பொருத்தவரை பருத்தி வீரனில் நான் நடித்த முத்தழகு கேரக்டர் இப்போதுவரை மக்கள் மனதில் நிற்கிறது. அதனால் அது போன்று அழுத்தமான வேடங்களில் நடிப்பதில் நான் ஆர்வமாக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார் பிரியாமணி. 

அத்துடன் ''மணிரத்னம் எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குனர். அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று அழைப்பு வந்தால், அது என்ன கதாபாத்திரம் என்று கூட கேட்காமல் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். 

அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுவேன். குறிப்பாக மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் படத்தில் நடிப்பது என்னைப் போன்ற நடிகைகளுக்கு ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதம்'' என்று தெரிவித்துள்ளார் பிரியாமணி.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title