Nov 8, 2025 - 07:44 PM -
0
ஜெயிலர் படத்தை அடுத்து மீண்டும் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
ஏற்கனவே ஜெயிலர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோரும் இந்த படத்திலும் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவையும் ஒரு ஆந்திரா பொலிஸ்அதிகாரி வேடத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார் நெல்சன்.
சமீபத்தில் பாலகிருஷ்ணாவை சந்தித்து அவர் நடிக்க வேண்டிய ரோல் மற்றும் சம்பளம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, அதில் திருப்தி இல்லாமல் அவர் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தனக்கான ரோலில் மிகக்குறைவான காட்சி இருப்பதோடு, அதற்கான சம்பளமும் குறைவாக இருப்பதாகச் சொல்லி அவர் நடிக்க மறுத்து விட்டதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

