Nov 9, 2025 - 04:54 PM -
0
சட்டத்துக்கும் கொள்ளைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையத்தின் ஒழுங்கமைப்பில் 'அரசியற் தீர்வும் - பொறுப்புக் கூறலும் - ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு' மற்றும் நாட்டின் தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான அவசியமான கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்துள்ளது.
இன்று (09) மாலை 4.00 மணிக்கு யாழ். தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. குறித்த நிகழ்வில் மூத்த சட்டத்தரணி திரு. K.S இரத்தினவேல் சிறப்புரையாற்றவுள்ளதோடு
இதனை தொடர்ந்து "தற்போதைய சூழலில் அரசியலமைப்புக்கேட்டின் அரசியல் தீர்வு பற்றித் தமிழரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்?" என்ற தலைப்பில், தமிழ் அரசியல் பரப்பில் உள்ள முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தருமலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் பங்கேற்கவுள்ளனர்.
குறித்த நிகழ்வில், சுவிசர்லாந்து தூதரக முதன்மைச் செயலாளர் ஐஸ்ரின், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத் தலைவர். பொ.ஐங்கரநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், செ.கஜேந்திரன், தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளின் உறுப்பினர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
--

