செய்திகள்
உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் கொள்வனவு விலை அறிவிப்பு!

Nov 12, 2025 - 07:04 AM -

0

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் கொள்வனவு விலை அறிவிப்பு!

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 150 ரூபாவுக்கும் அரசாங்கம் கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த நேற்று (11) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். 

 

இதன் விளைவாக, சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோகிராம் ரூபா 200 வரையிலும், உருளைக்கிழங்கின் விலை ஒரு கிலோகிராம் ரூபா 300 வரையிலும் உயரும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

 

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் பயிரிடும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைத்து அமைச்சர் இந்தக் கொள்வனவு விலைத் திட்டத்தை வெளியிட்டார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05