Header Logo

செய்திகள்
உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் அதிகூடிய வரி வருமானம்!

Nov 20, 2025 - 09:58 AM -

0

உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் அதிகூடிய வரி வருமானம்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரலாற்றில் அதிகூடிய வரி வருமானத்தை ஈட்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. 

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் றுக்தேவி. பீ.சீ. பெர்னாண்டோ அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார். 

குறித்த அறிக்கையில், 

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவு அதிகப்படியான வரி வருமானம் 2025 ஆம் ஆண்டுக்காக 17.11.2025 ஆம் திகதி ஈட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த மொத்த வரி வருமானம் ரூபா 2,002,241 மில்லியன் (ரூபா 2,002.241 பில்லியன்) ஆகும். 

இது 2024 ஆம் ஆண்டின் மொத்த வரி வருமானத்துடன் ஒப்பிடும்போது ரூபா 60,079 மில்லியன் அதிகமாகும். 

2024 ஆம் ஆண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட ரூபா 1,942,162 மில்லியன் வரி வருமானத்துடன் ஒப்பிடும்போது, 2025.11.17 ஆம் திகதியளவில் வரி வருமானம் ரூபா 2,002,241 மில்லியன் வரை அதிகரித்துள்ளது. 

இதன்மூலம் அரசு நிதி நிலையினை பலமாக முன்னெடுப்பதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அதியுயர்ந்த பங்களிப்பினை வழங்கியுள்ளது. 

நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைய நம்பிக்கையாக மற்றும் நாட்டின் பொது மக்களின் சுபீட்சத்திற்காக வரி செலுத்தியவர்களுக்கும், அதற்காக கூட்டுறவுடன் ஒத்துழைப்பினை வழங்கிய அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

title