Header Logo

செய்திகள்
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நியூசிலாந்துப் பெண் குறித்து விசாரணை

Nov 20, 2025 - 12:28 PM -

0

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நியூசிலாந்துப் பெண் குறித்து விசாரணை

செல்லுபடியான முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி நாட்டில் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு போக்குவரத்துத் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. 

சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் இருந்தாலும், அதில் முச்சக்கர வண்டிகளைச் செலுத்துவதற்கான உரிய வகையின் கீழ் அனுமதி இல்லையென்றால், நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்குத் தற்காலிக முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது. 

அதற்கமைய, இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் உரிய வகையின் கீழ் முச்சக்கர வண்டிகளைச் செலுத்த விரும்பினால், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடாகத் தற்காலிக முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கிடையில், அண்மையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நியூசிலாந்துப் பெண் ஒருவருக்கு முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு எவ்வாறு அனுமதி கிடைத்தது என்பது குறித்தும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள சில முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு வாடகை அடிப்படையில் முச்சக்கர வண்டிகளை வழங்குவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும், அவ்வாறு வழங்கும் உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

title