Header Logo

செய்திகள்
இன்றும் 100 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழை!

Nov 24, 2025 - 06:32 AM -

0

இன்றும் 100 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழை!

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் தளம்பல் நிலை நாளை (25) ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் பல பிரதேசங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

title