Nov 27, 2025 - 06:13 PM -
0
யாழ். மாவட்டத்தில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 711 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முழுமையாகவும் 15 வீடுகள் பகுதிகளலும் பாதிப்படைந்துள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாதிக்கப்பட்டவர்களில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 275 அங்கத்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 02 குடும்பங்களைச் சேர்ந்த 09 பேர் போக்காட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய், சங்கானை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம், வேலணை, சாவகச்சேரி,பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் இதன் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன் பொன்னாலை பருத்தித்துறையின் ஏ.பி.019 வீதியின் 50km தொடக்கம் 55km வரையான பகுதி சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அப்பாதையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
--

