Nov 28, 2025 - 04:18 PM -
0
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 510 குடும்பங்களைச் சேர்ந்த 1,598 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதன்போது ஒரு வீடு முழுமையாகவும் 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 11 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு காற்றின் வேகம் அதிகமாக இருப்பதனால் கீரிமலை கடல் பகுதி கொந்தளிப்புடனும் இருக்கின்றது.
தென்மராட்சி கொடிகாமம் மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் ஏ9 வீதியோரமாக நின்ற மரம் ஒன்று இன்று (28) அதிகாலை வேருடன் சாய்ந்து வீதிக்கு குறுக்காக விழுந்திருந்தது.
இதனால் வீதியில் ஒரு வழிப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து மழைக்கு மத்தியிலும் அதிரடியாகச் செயற்பட்ட யாழ்.மாவட்ட அரச மரக் கூட்டுத்தாபன அதிகாரிகள் குறித்த இடத்திற்கு விரைந்து வீழுந்திருந்த குறித்த மரத்தை அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
--

