Nov 29, 2025 - 12:50 PM -
0
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 2,397 குடும்பங்களைச் சேர்ந்த 7,513 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த சீரற்ற காலநிலையால் ஒரு உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளனர்.
அத்தோடு 2 வீடு முழுமையாகவும் 108 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
--

