Header Logo

செய்திகள்
ஹட்டன் - நோர்டன்பிரிட்ஜ் வீதியில் புதிய இரும்புப் பாலம்

Dec 12, 2025 - 06:04 PM -

0

ஹட்டன் - நோர்டன்பிரிட்ஜ் வீதியில் புதிய இரும்புப் பாலம்

ஹட்டன் - நோர்டன்பிரிட்ஜ் பிரதான வீதியின் காசில்ரீ பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்தமையால் தடைப்பட்டிருந்த போக்குவரத்து, நாளை (13) முதல் வழமைக்குத் திரும்பும் என நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

குறித்த பாலத்தின் இணைப்புகள் ஏற்கனவே பழுதாகியிருந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாகப் பாலம் கடுமையாகச் சேதமடைந்து கடந்த மாதம் (29) இடிந்து விழுந்தது. அன்று முதல் அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்தது. 

இதனையடுத்து, பல்லேகல இலங்கை இராணுவத்தின் 31ஆவது பொறியியல் படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியல் பிரிவினர் ஒன்றிணைந்து, 15 மீற்றர் நீளமுள்ள புதிய இரும்புப் பாலத்தைப் பொறுத்தும் பணிகளை முன்னெடுத்தனர். தற்போது இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. 

பாலத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், நாளை (13) முதல் பொதுமக்களின் போக்குவரத்திற்காகப் பாலம் திறக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

--

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title