Header Logo

செய்திகள்
டிசம்பர், ஜனவரி மாதங்களில் மீண்டும் புயல் அபாயம்

Dec 12, 2025 - 08:22 PM -

0

 டிசம்பர், ஜனவரி மாதங்களில் மீண்டும் புயல் அபாயம்

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், அலை வடிவக் குழப்பங்கள், தாழ்முக்கங்கள் அல்லது புயல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் இன்று (12) தெரிவித்தார். 

கடந்த 30 ஆண்டுகளில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி செயற்பட்ட விதம் குறித்த தரவுகளை ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

இதன்படி, வட மாகாணத்தில் சாதாரண மழைவீழ்ச்சியை விட அதிக மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும், வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சாதாரண மழைவீழ்ச்சியை அண்மித்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேல் மற்றும் தென் மாகாணங்களில் சாதாரண மழைவீழ்ச்சியை விடக் குறைவான மழைவீழ்ச்சியே நிலவும் என அந்தத் தரவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் அல்லது புயல்கள் உருவாகும் பட்சத்தில், இந்த வானிலை முன்னறிவிப்புகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title