Dec 15, 2025 - 05:19 PM -
0
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் நேற்று (14) முத்துஐயன்கட்டு குளத்தின் நிலமைகளை நேரடியாக கண்காணித்தனர்.
இதன்போது தற்போது முத்துஐயன்கட்டுக்குளம் உடைப்பெடுக்கும் அபாயம் என்ற செய்தி பொய் வதந்தியெனவும் இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
இதன்போது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகின் (DDMCU) உதவி பணிப்பாளர், நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மற்றும் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் ஆகியோருடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடி தற்போதைய நிலைமையை ஆய்வு செய்தனர். இதன்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரனும் கலந்துகொண்டிருந்தார்.
குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதியில் கட்டமைப்பு சேதம் காணப்படுவதால், தற்போது அதிக நீர் இருப்பின் காரணமாக அங்கு கொங்கிரீட் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
மேலும், கனரக வாகனங்களை அந்தப் பகுதிக்கு கொண்டு செல்லவும் முடியாததால், நேற்று (14) மற்றும் நேற்று முன்தினம் (13) திட்டமிடப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
எதிர்வரும் மழையை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள ரேடியல் கதவுகள் மூலம் குளத்தின் நீர்மட்டத்தை 20 அடி வரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் கனமழை பெய்யும் சூழல் ஏற்பட்டால், வால் பகுதியை வெட்டி கூடுதல் நீரை வெளியேற்றும் மாற்றுத் திட்டமும் தயாராக உள்ளது.
--
