Header Logo
SLIC
பல்சுவை
செல்ல பிராணிகள் கண்காட்சிக்கு யானையை அழைத்து வந்த மாணவி

Dec 19, 2025 - 01:10 PM

செல்ல பிராணிகள் கண்காட்சிக்கு யானையை அழைத்து வந்த மாணவி
Mobitel Inner 1278
EDEX Inner

கேரள மாநிலத்தில் கோவில் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். அவை அலங்கரிக்கப்பட்டு நெற்றி பட்டம் அணிவிக்கப்பட்டு எழுந்தருளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன. 

திருச்சூரில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரம் திருவிழாவில் கோவில் முன்பு இருபுறமும் தலா 15 யானைகள் அணிவகுத்து நடைபெறும் குடை மாற்றும் நிகழ்வை காண பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். 

இந்தநிலையில் பாடசாலையில் நடந்த செல்ல பிராணிகள் கண்காட்சிக்கு மாணவி ஒருவர் யானையை அழைத்து வந்தார். இதை பார்த்த பாடசாலை நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. 

எர்ணாகுளம் அருகே கரூர் பகுதியில் உள்ள தனியார் பாடசாலையில் ‘பெட் ஷோ’ எனப்படும் செல்ல பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது. 

இந்த கண்காட்சியில் பாடசாலை மாணவிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்ல பிராணிகளை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி பலர் பூனை, நாய், குதிரை போன்றவற்றை காட்சிப்படுத்தினர். 

அப்போது செல்ல பிராணிகள் கண்காட்சிக்கு மாணவி ஒருவர் யானையை அழைத்து வந்தார். இது செல்ல பிராணிகள் கூட்டத்தில் பெரிய விலங்காக காட்சியளித்தது. 

இதை பார்த்த பாடசாலை நிர்வாகம் மட்டுமின்றி மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதே சமயம் அந்த மாணவி, யானையை அங்கிருந்தவர்களிடம் காண்பித்தார். பின்னர் யானை மீது சிலர் ஏறி அமர்ந்ததாக தெரிகிறது. 

கம்பீரமாக நின்ற யானை முன்பு பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இதை அறிந்த எடப்பள்ளி வனச்சரக வனத்துறையினர், பாடசாலை நிர்வாகத்தினரிடம் விளக்கம் கேட்டனர். அனுமதி பெற்று யானை பாடசாலைக்கு கொண்டு வரப்பட்டதா என்றும், மாணவிகள் யானை மீது ஏறி அமர அனுமதி பெறப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பாடசாலை நிர்வாகம் தரப்பில், உரிய அனுமதி பெற்று யானையை பாடசாலைக்கு கொண்டு வந்ததாகவும், யானை மீது ஏறி அமர்ந்தது யானை உரிமையாளர்கள் தான் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், இந்த சம்பவம் குறித்து எழுத்து மூலமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாடசாலை நிர்வாகத்தினருக்கு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

MOST READ
08
“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

Aug 25, 2026 - 05:45 PM

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278