வடக்கு
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கதிரையால் கலவரம்!

Dec 23, 2025 - 11:38 AM -

0

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கதிரையால் கலவரம்!

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் ஆரம்பமானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

தம்மை கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை என்று கூறி கூட்ட மண்டபத்திற்கு வெளியே உறுப்பினர்கள் முரண்பாட்டில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் கூட்டமானது பரபரப்புக்கு மத்தியில் ஆரம்பமானது. 

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதனுக்கு மண்டபத்தின் முன்பக்கத்தில் வலது புறமாக ஆசனம் ஒதுக்கப்பட்டது. 

இதன்போது குறித்த ஆசனத்தில் அமர்வதால் தன்னால் கூட்டத்தை தலைமை தாங்குபவரது முகத்தை சரியாக பார்க்க முடியாது உள்ளதாகவும், ஆசனத்தை மாற்றுமாறும் கோரிக்கை விடுத்தார். 

இதன்போது மேடையில், பிரதேச செயலருக்கு அருகாமையில் ஆசனம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த இடத்தில் அமர வைக்க முடியாது என்றும், மேடைக்கு முன்பாக ஆசனம் ஒதுக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தெரிவித்துள்ளார். இதன்போது அங்கே குழப்பநிலை ஏற்பட்டது. 

பின்னர் தவிசாளருக்கு மேடைக்கு முன்பாக ஆசனம் வழங்கப்பட்ட நிலையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05