Dec 23, 2025 - 06:21 PM -
0
டித்வா பேரிடர் காரணமாக கடந்த 28 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் A 35 பிரதான வீதியில் 11 ஆம் மைக்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலம் ஆனது கடும் வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக கிளிநொச்சி முல்லைதீவு மாவட்டங்களுக்கான போக்குவரத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது இதன் காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவுக்கான போக்குவரத்து வட்டக்கச்சி ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில் குறித்த பாலத்தின் ஊடாக போக்குவரத்து இன்று (23) கிளிநொச்சி முல்லத் தீவுக்கான போக்குவரத்து மீண்டும் பாலத்தின் புனரமைப்பு பணிகள் துரித கதியில் நிறைவடைந்ததை அடுத்து 25 நாட்களின் பின்னர் மீண்டும் இவ்வீதி ஊடான போக்குவரத்து இணைக்கப்பட்டுள்ள மீண்டும் மக்கள் இவ் வீதியுடான போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பாலத்தின் புனரமைப்பு பணிகளை இந்திய இராணுவத்தினர் மற்றும் இலங்கை இராணுவத்தினர் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து துரித கெதியில் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
குறித்த விதியின் ஊடாக பயணிப்பவர்கள் அவதானிக்க வேண்டிய விடயங்கள் பயணிப்பவர்கள் இப்பாலமானது இருவழிப் பாதையாகவே அமைந்துள்ளது.
எனவே குறித்த பாலத்தின் ஊடாக பயணிப்பவர்கள் வீதி சமிக்கைகளை பின்பற்றி அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தாது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இவ்வி ஊடாக பயணத்தினை மேற்கொள்ள வேண்டுமென வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் காணொளி மூலம் திறந்து வைத்திருந்தார்.
--

