Dec 24, 2025 - 01:26 PM -
0
பருத்தித்துறை நகரசபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீபோல் டக்ளஸ் தலைமையில் இன்று (24) காலை 9:30 மணியளவில் ஆரம்பமானது.
இன்றைய அமர்வில் இரண்டு உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.
இன்றைய அமர்வில் 2026 ஆம் ஆண்டு நடமாடும் சேவைகளுக்கான அனுமதிகள், வாகன திருத்தங்களுக்கான அனுமதிகள் மற்றும் மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகள், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்துடன் அண்மையில் தையிட்டியில் வேலன் சுவாமிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
--

