Header Logo
SLIC
மலையகம்
நுவரெலியா மற்றும் ஹட்டனில் நத்தார் விசேட வழிபாடுகள்!

Dec 25, 2025 - 12:32 PM

நுவரெலியா மற்றும் ஹட்டனில் நத்தார் விசேட வழிபாடுகள்!
Mobitel Inner 1278
EDEX Inner

மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடப்படும் நத்தார் பண்டிகை முன்னிட்டு நாடெங்கும் உள்ள தேவாலயங்களில் விசேட வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெற்றன. 

அதன்படி நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயம் ( St. Francis Xavier's church Nuwara eliya ) மற்றும் ஹட்டன் ஸ்ரீ கிராஸ் தேவாலயம் (Hatton Holy Cross Church) இல் நத்தார் ஆராதனை நடைபெற்றது . 

இதனடிப்படையில், இரவு 12 மணியிலிருந்து வழிபாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது, இயேசு கிறிஸ்துவின் பிறப்புத் தினமான நத்தார் தின விசேட திருப்பலி நள்ளிரவு ஒப்புக்கொடுக்கப்பட்டது. 

குறிப்பாக நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தில் நள்ளிரவு (25) முதல் மூன்று மொழிகளிலும் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் இடம்பெற்றன. 

மேலும் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை நிறைவின்போது மக்கள் தங்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதையும் காண முடிந்தது. 

இவ்வாராதனையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக வழிபாடுகளில் பங்கு கொண்டிருந்தனர். 

இதன்போது ஆலயங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது. 

இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் இயேசுவின் கிறிஸ்துவின் பிறப்பு கொட்டில் திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டுள்ளது அந்த வகையில் மலையகத்தில் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278