Dec 26, 2025 - 01:19 PM -
0
31.05.2006 ஆம் திகதிய 06/0984/208/008 இலக்க அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைவாக அனர்த்தங்களின் போது இறந்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஈடுபடுவதோடு அனர்த்த பாதிப்புள்ளானவர்களிற்கு நல்லாசி வேண்டும் முகமாக டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு வருடந்தோறும் தேசிய ரீதியில் நினைவு கூரப்பட்டுவருகின்றது.
அதற்கமைய, இன்று (26) காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
9.00 மணி 15 நிமிடத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டத்தைத்தொடர்ந்து 9.00 மணி 25 நிமிடத்தில் அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் ,உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
--

