Header Logo

வடக்கு
பல்வேறு துயர்களின் போது இந்தியா முதன் முதலில் கரம் கொடுத்துள்ளது!

Jan 1, 2026 - 06:34 PM -

0

பல்வேறு துயர்களின் போது இந்தியா முதன் முதலில் கரம் கொடுத்துள்ளது!

இலங்கையில் ஏற்பட்ட பல்வேறு இடங்களின் போது இந்தியா முதன் முதலில் கரம் கொடுத்துள்ளது. இலங்கையில் குறிப்பாக வடக்கு மக்களையும் காப்பாற்றுகின்ற தமது கடமையை அவர்கள் நிறைவேற்றி உள்ளனர் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (01) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தார். அவர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சி மற்றும் கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார். 

அதன் அடிப்படையில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற தங்களுடைய கோரிக்கையை முன் வைத்தோம். 

பழைய முறைப்படி இத்தேர்தலை நடத்தி, எல்லை நிர்ணயங்களை மேற்கொள்ளும் சூழலை உருவாக்கும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்துள்ளோம். 

அதே நேரத்தில் பொருளாதார ரீதியில் இலங்கை வீழ்ச்சி அடைந்து போது தனது காலை பதித்தது. இயற்கை அனர்த்தத்தின் போது மக்கள் தவித்த போது இந்தியா முதன் முதலாக தனது காலை பதித்துள்ளது. இலங்கையில் குறிப்பாக வடக்கு மக்களையும் காப்பாற்றுகின்ற தமது கடமையை அவர்கள் நிறைவேற்றி உள்ளனர். 

அந்த வகையில் ஜனாதிபதியிடம், குறிப்பாக பாராளுமன்றத்திலும் தெரிவித்திருந்தேன் இலங்கைக்கு அன்மையிலுள்ள நாடு இந்தியாவை பற்றி பிடியுங்கள். 

நேசக்கரம் நீட்டி,சமாதானத்துடன் இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்ற ஒரு வாய்ப்பு வருகின்ற போதே நாம் இலங்கையை மீட்டெடுக்க முடியும் என்று நாங்கள் கூறி இருந்தோம். 

அனையும் நாங்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் கூறியிருந்தோம்.இலங்கையில் ஏற்பட்ட இடர்கள் போது முதன் முதலில் இந்தியா இலங்கைக்கு உதவிகளை முன்னெடுத்த பின்னர் ஏனைய நாடுகள் தமது அறிவிப்புக்களை முன்னெடுத்தது உதவிகளையும் செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார். 

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைது தொடர்பாகவும் இதன்போது கருத்து தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title