Header Logo
SLIC
பல்சுவை
சிறுமியை கடத்தி நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்

Jan 14, 2026 - 04:36 PM

சிறுமியை கடத்தி நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்
Mobitel Inner 1278
EDEX Inner

இந்தியாவின் புதுச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள ஒரு பாடசாலையில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாடசாலைக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் சிறுமி, பாகூர் பகுதியில் இருப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து பெற்றோர் அளித்த தகவலின் பேரில் பாகூர் பொலிஸார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி வந்து காதலன் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் காதலன் நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

இதைதொடர்ந்து பொலிஸார் சிறுமியை மீட்டனர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காதலன் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 

இவ்வழக்கில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட காதலன் மற்றும் சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 சிறுவர்களை தேடி வருகின்றனர். மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 3 மாணவர்களும் பாடசாலை படிப்பை இடையிலேயே கைவிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ
08
“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

Aug 25, 2026 - 05:45 PM

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278