Header Logo
SLIC
ஜோதிடம்
மனக்குழப்பம் நீங்கும் ராசிக்காரர்கள் நீங்களா?

Feb 9, 2026 - 07:03 AM

மனக்குழப்பம் நீங்கும் ராசிக்காரர்கள் நீங்களா?
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று ஜனவரி 25, 2026 தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக் கிழமை, இன்று மீனம், மேஷ ராசியில் சந்திரன் ரேவதி, அஸ்வினி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். சிம்மம், கன்னி ராசியில் உள்ள பூரம், உத்திரம் நட்சத்திரத்திற்க்கு இன்று சந்திராஷ்டமம் உள்ளது. 

இந்நிலையில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள் 

மேஷம் 

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பணம் வந்து பையை நிரப்பும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். சொத்து பிரச்சனைகள் சுமூகமாக முடியும். எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் செல்லுங்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் அதிக வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள். 

ரிஷபம் 

மனக்குழப்பம் ஏற்படும் நாள். மறைமுக எதிர்ப்பு உண்டு. விரயங்கள் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் குணமறிந்து செயல்படுவது நல்லது. எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள். 

மிதுனம் 

சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும். தாராளமாக செலவிட்டு மகிழ்வீர்கள். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள்.‌ வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள். 

கடகம் 

நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு திருப்தி தரும். இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டமான நாள். 

சிம்மம் 

விரோதங்கள் அகல விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். திட்டமிட்ட காரியத்தில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது. சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கவனம் தேவைப்படும் நாள். 

கன்னி 

இல்லம் தேடி நல்ல தகவல் கிடைக்கும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணம் வெற்றியை தரும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை கைகூடி வரும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். மகிழ்ச்சியான நாள். 

துலாம் 

வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். மனக்குழப்பங்கள் அகலும். இடமாற்றம் இனிமை தரும். வரவு திருப்தி தரும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். உங்களை சுற்றி இருப்பவர்கள் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள். 

விருச்சிகம் 

முன்னேற்றம் கூடும் நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில்கூட வெற்றி பெறுவீர்கள். பொருளாதார பற்றாக்குறை அகலும். நூதன பொருள் சேர்க்கை உண்டு. வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள். 

தனுசு 

கல்யாண முயற்சி கைகூடும் நாள். மனக்குழப்பம் அகலும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். 

மகரம் 

யோகமான நாள். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். மதிப்பும், மரியாதையும் உயரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியம் கூடும் நாள். 

கும்பம் 

அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு, வாங்கல், கொடுக்கல்கள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். மனசாட்சி படி செயல்படும் நாள். 

மீனம் 

போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழங்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

Mobitel 1278