Jan 28, 2026 - 10:57 AM -
0
கடந்த 26 ஆம் திகதி இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பதில் தலைவர் சீ. வி. கே. சிவஞானம் மற்று பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனையும் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்து உரையாடியிருந்தார்.
இச்சந்திப்பில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் நிலைப்பாட்டினையும் கனடா தொடர்ச்சியாக ஆதரித்து வரும் பின்னணியில், அதற்காக இலங்கை தமிழரசு கட்சியினர் நன்றி தெரிவித்ததோடு தொடர்ந்தும் எதிர்காலத்தில் அத்தகைய ஆதரவை நாம் நாடி நிற்பதை அவருக்குத் தெரியப்படுத்தியதாக பதில் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
--

