Jan 28, 2026 - 03:32 PM -
0
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 பிரதான வீதியில், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த அரச பேருந்தும், முறிகண்டியிலிருந்து மணல் ஏற்றி யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின.
டிப்பர் வாகனச் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்விபத்தில் அரச பேருந்தின் சாரதி, இரண்டு பயணிகள் மற்றும் டிப்பர் வாகனச் சாரதி உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

