Jan 29, 2026 - 12:57 PM -
0
யாழ்ப்பாணம் - தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தென்மராட்சி பிரதே செயலகத்தில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.இளங்குமரன் தலைமையில் நேற்று (28) குறித்த கூட்டம் இடம்பெற்றது.
இந்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராமநாதன் அர்ச்சுனா, தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன் இக்கூட்டத்தின் போது சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வு, நாவற்குழி சிங்கள வீட்டுத்திட்டம், பிரதேச சபை மலக்கழிவுகள் அனுமதியின்றி விவசாய நிலப் பிரதேசங்களில் கொட்டப்படுதல், பொருளாதார மத்திய நிலையத்தை மீளவும் குத்தகைக்கு விடுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

